Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 9 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என பல வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி அன்று புதிய நிதியாண்டு தொடங்கப்பட இருப்பதால் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த விடுமுறை நாட்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தங்களுடைய வங்கி வேலைப்பாடுகளை அதற்கு முன்னதாக முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால் ஆன்லைன் சேவைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏப்ரல் 1-ஆம் தேதி புதிய நிதியாண்டு தொடங்க இருப்பதால் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய மற்றும் பிராந்திய அளவிலான விடுமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தேசிய விடுமுறை நாட்களில் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். ஆனால் சிம்லா, சண்டிகர், ஐஸ்வால், ஷில்லாங் உள்ளிட்ட பகுதிகளில் வங்கிகள் செயல்படும். வங்கிகளின் விடுமுறை தினங்கள் குறித்த பட்டியல் இதோ,

  • ஏப்ரல் 2 [தெலுங்கு வருட பிறப்பு மற்றும் சஜிபு நோங்கபன்பா பண்டிகைகள்] சென்னை, ஸ்ரீநகர், பனாஜி, நாக்பூர், மும்பை, இம்பால், பெங்களூரு, ஜம்மு, பெலாப்பூர், ஹைதராபாத்
  • ஏப்ரல் 4 [சர்கூல் பண்டிகை] ராஞ்சி நகர் வங்கிகள்
  • ஏப்ரல் 5 [பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாள்] ஹைதராபாத் வங்கிகள்
  • ஏப்ரல் 14 [தமிழ் புத்தாண்டு, மகாவீரர் ஜெயந்தி, அம்பேத்கர் பிறந்த தினம், வைசாகி பண்டிகைகள்] தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலிருக்கும் வங்கிகள்
  • ஏப்ரல் 15 [புனித வெள்ளி, வங்காள புத்தாண்டு] நாடு முழுவதும் உள்ள வங்கிகள்
  • ஏப்ரல் 16 [கரியா பூஜா] அகர்தலா நகர் வங்கிகள்
  • ஏப்ரல் 19 [ஷாப் ஐ காதர் மற்றும் ஜூமத் உல்-விதா] ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகள்

Categories

Tech |