தமிழகத்தில் கொரோனா 3-வது அலை குறைந்து வருவதால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சென்ற 2 ஆண்டுகளில் பள்ளிகள் சரியாக திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றனர். எனினும் நடப்பாண்டு கட்டாயம் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளன. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே.6- மே.30ஆம் தேதி வரையும், 11ம் வகுப்புக்கான தேர்வுகள் மே.9 -31ஆம் தேதி வரையும், 12ம் வகுப்புக்கான தேர்வுகள் மே.5- 28ஆம் தேதி வரையும் நடைபெறும். அந்த அடிப்படையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25-ல் தொடங்குகிறது.
இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகரின் ஆளுகைக்கு உட்பட்ட அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 15ஆம் தேதி முதல் மதிப்பீட்டு குழு தீர்வின் வாயிலாக மதிப்பிட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி மதிப்பீட்டு தேர்வுகால அட்டவணையை அடுத்து பாடத்திட்டம் தொடர்பான கால அட்டவணையும் . வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த முழு விபரங்களுக்கு https://drive.google.com/file/d/1rryeg812xQE5NWRugIXherhz-eDiVRV-/view என்றஇணயத்தளத்திக்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.