தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான வாக்குகள் சேகரிக்கும் பணியில் வாக்காளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து முதற்கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 7 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் இந்திய தயாரிப்பான மதுபான விற்பனை செய்யும் மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இத்திட்டத்தை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை மூலம் எச்சரித்துள்ளது