தமிழகத்தில் வெப்பசலனத்தின் காரணமாக இன்று மதுரை,தேனி, விருதுநகர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் வெப்பசலனத்தின் காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், சேலம்,மதுரை, தர்மபுரி, சிவகங்கை,விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்,
சென்னையை பொறுத்தவரை வானம் காலை நேரங்களில் தெளிவாகவும் மாலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.