தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, ஈரோடு,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மன்னார் வளைகுடா, கேரளா,கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.