தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் விடுபட்ட வாக்காளர்கள் அந்தந்த பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 19ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி மாவட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்கலாம்.