Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதிலும் மத்திய அரசால் ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் 7ஆம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் பெறுகின்றனர்.

இத்தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இந்த தேர்வானது மன திறன் சோதனை மற்றும் உதவித்தொகை சார் சோதனை என்ற 2 தாள்களைக் கொண்டது. மேலும் இத்தேர்வு தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கபட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேர்வு கட்டணமாக 50 ரூபாயும் சேர்த்து வரும்  27ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் தகவல்களை பெறுவதற்கு அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். அதன்பின் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் இத்தேர்வுக்கான மேலும் சில கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |