Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 லட்சம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து அனைத்து நியாயவிலை கடைகளிலும் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, தமிழகத்தில் 9 லட்சம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |