தமிழகத்தின் உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி இன்றுடன் ஓய்வுப் பெறுகிறார். இதனையடுத்து, புதிய உள்துறைச் செயலர் யார் என்பது குறித்து பலரது பெயர் அடிபட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலராக இருந்த எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே.பிரபாகர் 1989ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.இந்நிலையில் தமிழ்நாட்டில் 91 காவல் ஆய்வாளர்கள் காவல்துணைக் கண்காணிப்பாளர்களாக(TSP) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான அரசாணையை உள்துறை கவனிக்கும் கூடுதல் தலைமை செயலர் எஸ் கே பிரபாகர் வெளியிட்டுள்ளார்.