தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் டெல்டா பிளஸ் கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.