நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில் புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களை தவிர பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாயம் இ-பாஸ் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் https://eregister.tnega.org என்ற இணையதளம் மூலம் -பாஸ் பெறலாம். இல்லையென்றால் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளது.