Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் LKG வகுப்புகள் மூடல்?…. பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள், கிரீச்கள், அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட குழந்தைகளுக்கான வகுப்புகள் கடந்த 16 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த வகுப்புகள் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது திறந்துள்ளதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள எல்கேஜி வகுப்புகளை மூட கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்கேஜி குழந்தைகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் 1-ஆம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புகளுக்குப் மாற்றப்படுகின்றனர். நடப்பு கல்வியாண்டு முடிந்ததும் எல்கேஜி வகுப்புகளை மூடிவிட்டு, சமூக நலத்துறையின் அங்கன்வாடிகளில் மீண்டும் எல்கேஜி வகுப்பை  நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..

Categories

Tech |