Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் MBBS மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….. எம்.எல்.ஏ. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே சோம்பட்டு பகுதியை சேர்ந்த பாலு-கல்பனா ஆகியோரின் மகன் பி. இளங்கோவன் பெருவாயில் உள்ள டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்றார். இதில் மாணவருக்கு MBBS கலந்தாய்வில் சேலம் அன்னபூர்ணா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. இதேபோன்று கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தை சேர்ந்த ஹேபூஷணம்-லஷ்மி ஆகியோரின் மகன் விகேஷ் பெருவாயல் டி.ஜெ.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

இதில் மாணவன் விகேஷ் MBBS கலந்தாய்வில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க தேர்வானார். இதையடுத்து இந்த 2 மாணவர்களுக்கும் பாராட்டு விழா கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர் பழனி, டி.ஜெ.எஸ் கல்வி குழும இயக்குனர் டி.ஜெ.ஜி.தமிழரசன் முன்னிலை வகித்தனர். அதன்பின் பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு MBBS படிப்பிற்கு தேர்வான மாணவர்கள் இழங்கோவன், விகேஷ் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து ஸ்டெதஸ்கோப் வழங்கியதோடு, அவர்களுடைய கல்வி உதவித்தொகையாக இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ  டி.ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் MBBS படிப்பிற்கு தேர்வானால் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் மேற்கண்ட இரு மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு மாணவர்கள் திறம்பட கல்வியில் சேர்ந்து அவரவர் விருப்ப பாடங்களை  உயர் கல்வியில் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Categories

Tech |