Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் PG TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு…. அரசுக்கு கோரிக்கை…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊடங்குகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுநர்கள் நிலை-1 பணி இடங்களை நிரப்புவதற்க்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

அதன்படி முதல் கட்ட தேர்வுக்கான கால அட்டவணை கடந்த மாதம் வெளியானது. அந்த வகையில் தமிழ் உள்ளிட்ட 14 பாடங்களுக்கு வரும் 12 முதல் 15 ம் தேதி வரையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2-ம் கட்ட தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியானது. அந்த கால அட்டவணையில் வருகிற 16 முதல் 20 ம் தேதி வரை மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறும் என சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த வகையில் தேர்தல் பணிக்கு, இந்த ஆசிரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் பல பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17ஆம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை அதற்கான பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்பு , ஆசிரியர் 2-ம் கட்ட தேர்வை நடத்துமாறு, தேர்வர்கள் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |