Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் RSS பேரணிக்கு அனுமதி…. முக்கிய நிபந்தனைகள் வெளியீடு….. என்னென்ன…???

தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி அன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது அதற்கான நிபந்தனைகள் வெளியாகியுள்ளது.  இதன்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தக்கூடாது, லத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடாது. மதம், ஜாதி குறித்து தவறாக பேசக்கூடாது. இந்திய ஒருமைப்பாட்டுக்குள், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றால் உரிய நடவடிக்கை வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |