தமிழகத்தின் மூத்த குடிமக்களாக பழங்குடியின சமூகத்தினர் கருதப்படுகின்றனர். இவர்களின் வாழ்வு மேம்பட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பி எச் டி பயிலும் SC/ST மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்கு கீழ் ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் வேறு எந்த உதவி தொகையையும் பெறாமல் இருந்தால் மட்டுமே தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் எட்டு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். 55 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். மாதம்தோறும் பத்தாயிரம் ரூபாய் என்று பத்து மாதங்களுக்கு ஒரு லட்சம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.