தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் திருவாரூர் உட்பட அரசு உதவி பெறும் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதேப்போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அரசு பாரபட்சம் இன்றி TET தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் முறையான தகுதியுடன் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது.
RTE விதிப்படி அரசாணை 181 தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டங்கள் குறித்து அரசு அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதன்பிறகு ஆசிரியர்களுக்கும் இந்த தகவல் பகிரப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று வரை 4 TET தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல ஆசிரியர்கள் நீதிமன்றத்தின் மூலம் TET தேர்வில் இருந்து விலக்கு பெற்றனர்.
இவர்களில் கடந்த 2010-க்குப் பின் பணி நியமனம் பெற்றவர்கள், கடந்த 2011-க்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்கள், அனைத்து சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் TET நிபந்தனை ஆசிரியர்கள் அனைவருக்கும் TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நிபந்தனை அடிப்படையில் நியமிக்கப்பட்ட TET தேர்வு ஆசிரியர்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றனர். இவர்களும் தங்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். மேலும் TET நிபந்தனை ஆசிரியர்கள் ஒன்று கூடி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை மனு எழுதி அனுப்பி உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.