Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் TET தேர்வு எழுத காத்திருக்கிறீர்களா….? விரைவில் வெளியாகும் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் TET தேர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் தேதி வெளியாகும் என்று தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட TET ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதமாக மத்திய அரசு இந்த TET தேர்வை அறிமுகம் செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் TET தேர்வானது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TNTRB) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வானது (CTET) மத்திய அரசு சார்பில் CBSE நடத்தி வருகிறது.

கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் தேர்வு எப்போது வரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தேர்வு குறித்து தேர்வு அதிகாரி ஒருவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் TET டெட் தேர்வுக்கான தேர்வு தேதி விரைவில் வெளியாகும். பின்னர் TET தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியானதும் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |