தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.
இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்துக்கான தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தேர்வாணையத்துறை தலைவர் கா.பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். குரூப்-4 தேர்வு அடுத்த மார்ச் மாதம் அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் போட்டித் தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால், இனி 9:30 மணி முதல் 12:30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.