Categories
Uncategorized

தமிழகத்தில்17 மாவட்டங்களில் – உச்சகட்ட பேரதிர்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு  1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,910-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,31,583 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 89,561ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இன்று மட்டும் 58,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் 20,15,147 பேருக்கு கொரோனா பரிசோதனையை செய்துள்ளது தமிழகசுகாதாரத்துறை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி 3,144 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 74 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 51,765ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட  70.56 % பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 17 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா உயிரிழப்பு :

சென்னை – 21

கடலூர்- 8

மதுரை -7

விருதுநகர் – 6

திருவள்ளூர் -5

வேலூர் – 4

தி.மலை – 4

காஞ்சிபுரம் – 3

ராணிப்பேட்டை – 2

செங்கல்பட்டு – 2

தேனி -2

க.குறிச்சி- 2

சிவகங்கை-2

கிருஷ்ணகிரி-2

புதுக்கோட்டை-2

ராமநாதபுரம்-1

கரூர்-1

Categories

Tech |