Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லையா?…. ஆர்டிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோர் குழந்தைகள் படிப்பதற்காக கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ்   செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 1,245 பள்ளிகள் உள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் 49 கேந்திரியா ‌வித்யாலயா பள்ளிகளில் 14 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தற்போது பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிப்பாடங்கள் கட்டாய பாடங்களாக உள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் அவை விருப்ப பாடங்களாக உள்ளது. அதனை தொடர்ந்து தமிழ் மொழி பாடம் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய பாடமாக இல்லை என்றும் தமிழகத்தின் எந்த கேந்திரியா வித்யாலயா பள்ளிகளின் தமிழ் ஒரு மொழி பாடமாக இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் சமஸ்கிருத மொழிக்கு பதிலாக தமிழை மொழி பாடமாக பயில முடியாது. இதனையடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி கற்பிக்கும் ஆசிரியர்களும், 53 சமஸ்கிருத கற்பிக்கும் ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தகவல் அறியும் சட்ட உரிமை சட்டத்தின் இந்த பதில்கள் இடம் பெற்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், இது கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |