தமிழகத்தில் 14மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் கடலூரிலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. புதுவையிலும் கடலூரிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற ஒரு விஷயத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடலூர், புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சொல்லியுள்ளார்கள். அதேபோல அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.