தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று கனமழை முதல் மித கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.