Categories
Uncategorized

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் ஒப்புதல்…!! விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்…!!

நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்கும் ஒப்புதல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது , நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி இரண்டாவது முறையாக தமிழக அரசு கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் அதனை குடியரசு தலைவருக்கு இன்னும் அனுப்பவில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கிவிட்டன. அதோடு நீட் தேர்வுக்கான அறிக்கை ஆன்லைனில் வெளியிடப்படவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் அறிக்கை அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? அல்லது 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா.? என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே இதில் இருந்து மாணவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் ஆளுநரும் முன்வர வேண்டும்.!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |