தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல கணேசன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் அவர் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.