தமிழகத்திற்கே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள சூழலில் தமிழக அரசையே கேட்காமல் மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து 45மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ ஆக்ஸஜன் தேவை உயர்ந்து உள்ள நிலையில் மத்திய அரசு உத்தரவின் படி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்பத்தூர் ஆலையிலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்ஸஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும்போது இங்கிருந்து ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது ஏன் ? என்ற கேள்வி எழுகிறது . தமிழகத்தில் 79,000பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் அதை விட குறைந்த அளவில் தான் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.