Categories
மாநில செய்திகள்

தமிழகத்தைப் போராட்டக் களமாக்க முயற்சி – ஸ்டாலின் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்தை போராட்டக் களமாக வைத்திருக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நினைப்பதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை திரு.வி.கா நகர் பகுதியில் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜியார், ஜெயலலிதா காலத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டம் போலவே ஆரோக்கியமான ஆலோசனையை முன்னெடுத்து இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய அவர் வேளாண் மசோதா குறித்து முதலமைச்சர் தெளிவான விளக்கம் அளித்த பிறகும் ஸ்டாலின் மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

Categories

Tech |