நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்திருந்தார். அவர் எப்போது அரசியலுக்கு வருவார். கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாள் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.
அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மக்களே நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனவரியில் கட்சி துவக்கம் டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பு எனக்கூறி மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம் இப்போ இல்லனா எதுவுமில்லை என்ற ஹேஸ்டேகை #trending செய்தார். இப்படி அறிவித்த ரஜினிதான் ஐயோ சாமி அரசியலே வேண்டாம் என்று தற்போது பின் வாங்கியுள்ளார் .