கச்ச நத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் தண்டனையானது விதிக்கப்பட்டு இருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் இந்த மூவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு பிரிவினரால் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கிணைப்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ஜூலை 27ஆம் தேதி இந்த வழக்கிற்க்கான தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, வழக்கின் தொடர்புடையவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பரபரப்பான இந்த தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது ஆகஸ்ட் 1ஆம் தேதி என்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி வழக்கில் தொடர்புடையவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதியம் 3.30 மணிக்கு தீர்ப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. மூன்று முப்பது மணிக்கு நீதிபதிகள் மாலை 4:45 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில் மாலை மணிக்கு விசாரணை மேற்கொண்டு இரவு 7 மணிக்கு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேர் குற்றவாளிகள் என்று அதிரடி தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. இவருக்கான தண்டனை விவரங்களை 3ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த வழக்கின் தீர்ப்பானது பரபரப்பை உண்டாக்கிய நிலையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நீதிபதி முத்துக்குமாரன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இந்த வழக்கில் சட்ட ஒழுங்கை பிரச்சனை ஏற்படாமல் இருக்க வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தீர்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு 3ஆம் தேதி மூன்றாம் தேதி வீடியோ கான்பிரன்ஸ் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்ற வளாகம் தெரிவித்திருந்தது.
சரியாக 11.45 மணிக்கு வந்த நீதிபதி இந்த வழக்கின் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 27 நபர்களை தனித்தனியே விவரங்களை கேட்டிருந்தார். இவர்களுக்கு என்னென்ன தண்டனை என்னென்ன பிரிவினை கீழ் வழங்கப்படும் என்று இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பட்டிருந்தப்பட்டு இருந்தது.
சற்றுமுன் இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் 27 குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 27 நபர்களுக்கும் மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.