புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞரை கடுமையாகத் தாக்கி வாயில் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெரும்பாலான மனிதர்கள் இன்னும் ஜாதி வெறியுடன் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து குலத்தினரும் ஒன்றுதான் என்ற கருத்தை யாரும் உணர்வதில்லை. தங்களை விட தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த மக்களை மிக இழிவாகவே கருதுகிறார்கள். அது சிறு குழந்தைகள் முதல் அவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அது மிகவும் தவறானது. அதுமட்டுமன்றி தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த அவர்களை உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் இழிவு படுத்தி மிகக் கொடூர செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்த மதன் என்ற இளைஞரை 4 பேர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மது அருந்தியபடி மதனை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் குடிக்க தண்ணீர் கேட்டபோது, வாயில் சிறுநீர் கழித்த அவமானப்படுத்தி உள்ளனர். அதன் பிறகு நான்கு பேரும் தூங்கிய போது, அங்கிருந்து தப்பிய மதன், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து மதன் அளித்த புகாரின் பேரில் பிரதீர், மெய்கண்டன், மூர்த்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.