Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’ மு.க.ஸ்டாலின்…. சீனு ராமசாமி புகழாரம்….!!!!

தமிழகத்தை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து, மகிழ்ந்து, ரசித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் “ஆண் தாய்” தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வெளிவர இருக்கும் “மாமனிதன்”, “இடி முழக்கம்”ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும், அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகளுக்கு நன்றி கூறி ஜான் ரீடு எழுதிய “உலகை உலுக்கிய பத்து நாட்கள்”நூலினை அவருக்குத் தந்தேன்.

அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான உங்களில் ஒருவன் நூலில் கையொப்பமிட்டு எனக்கு பரிசாக தந்தார். “மக்கள் அன்பன்”என் கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்து வாழ்த்தினார் என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |