தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, கொங்கு நாடு என்பதை பாஜக புதியதாகக் கொண்டு வரவில்லை. பொதுமக்களை எதிர்பார்க்கிற விஷயம்தான் அது. தமிழ்நாட்டில் கொங்கு மக்கள் அதிகமிருக்கும் பகுதியில் கொங்கு நாடு கொண்டு வரலாம் எனப் பொதுமக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். மக்களின் கருத்துக்கள் தான் செய்தித்தாளில் வந்துள்ளது. அதற்கான உண்மையான செய்தியை மத்திய அரசு கொண்டு வரும் பட்சத்தில் அது நிச்சயம் வெளிவரும் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.