Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய….. 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு….. “8 பேருக்கு ஆயுள்”….. 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை…. ஐகோர்ட் அதிரடி..!!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிழில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர்கள் சகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என 26 பேர் மீது போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை பெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய போக்சோ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டவராகவும், மீதமுள்ள 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலகட்டத்தில் இறந்து விட்டதால் மீதமுள்ள 21 பேர் மீது மட்டும் இந்த வழக்கினுடைய விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த 15 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த 21 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்திற்கு இவர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டார்கள்.. அப்போது நீதிபதி ராஜலக்ஷ்மி அவர்களுக்கான தண்டனை விவரத்தை அறிவித்துள்ளார். இதன்படி மொத்தம் 8 பேருக்கு ஆயுள் தண்டனையானது அளிக்கப்பட்டுள்ளது. சிறுமினுடைய உறவினர்கள் 6 பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், காவல் ஆய்வாளர் புகழேந்தி, உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி மற்றும் பாஜக பிரமுகர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிப்பதாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றமானது அறிவித்துள்ளது..

மொத்தம் 26 பேரில் 21 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதில் தற்போது தீர்ப்பு தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தலைமறாக இருக்கக்கூடிய மாரி, பாஷா, முத்துபாண்டி, மீனா ஆகியோருக்கு எதிரான அந்த விசாரணை என்பது தனியாக நடத்தப்படும் என்று நீதிபதிகள் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |