Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும்… மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்… தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை…!!!

தமிழகத்தில் மீண்டும் கந்துவட்டிக் கொடுமை தலைவிரித்து ஆடுவதால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் சில கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக கந்துவட்டி கொடுமை என்ற சம்பவம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. குழந்தைகள் என்றும் கூட பாராமல் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தினம்தோறும் இவ்வாறான சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அருகே கந்துவட்டி கொடுமையால் அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் பூ மாரியப்பன் பாம்பனில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் விழுப்புரத்தில் 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் மேலும் ஒருவர் தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கந்துவட்டி கொடுமை தலைதூக்கி உள்ளதால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |