மத்திய அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது..
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடியவர்களுக்கு இந்த முக்கிய விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் 25 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது என்பது வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலரிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.
தடகளத்தில் சீமா பூனியா, பேட்மின்டனில் லக்க்ஷயா சென், பிரனாய் ஆகியோருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் நாத்துக்கு மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை வரும் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார். வாழ்நாள் சாதனையாளர் விருது கிரிக்கெட் தினேஷ் ஜவஹர், கால்பந்து வீரர் பிமல் பிரஃபுல்லா கோஷ், மல்யுத்த வீரர் ராஜ்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.