தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு நல்லாசிரியர் விருதை காணொளி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார்.
இந்தியாவில் முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அவரை கவுரவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேருடன் சேர்த்து மொத்தம் 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதனை காணொலிக் காட்சி மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திருச்சி மாவட்டம் பிராட்டியூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆசாத் தேவிக்கும், ஈரோடு மொடக்குறிச்சி அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை லதாவிற்கும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.