Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு “பத்மஸ்ரீ விருது”…. அன்பு மணி ராமதாஸ் வாழ்த்து….!!!!

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இணையப்பக்கத்தில், “மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், கூகுள் சுந்தர் பிச்சை, டாடா குழும தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட 21 பேருக்கு பத்ம பூஷன் உட்பட பத்ம விருதுகள் 122 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் பத்ம பூஷன் விருது விமான விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு வழங்கப்பட்டிருப்பது அவருக்கு நாம் செய்திருக்கும் மரியாதை. அதேபோல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவையும் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் “பத்மஸ்ரீ விருது” தமிழகத்தைச் சேர்ந்த நடிகை சவுகார் ஜானகி, சமூக சேவகர் தாமோதரன், மருத்துவர் வீராச்சாமி சேஷய்யா, சிற்பி பாலசுப்பிரமணியன், கலைத் துறையைச் சேர்ந்த நடராஜன், ஏ.கே.சி, முத்து கண்ணம்மாள் உட்பட ஏழு பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |