நாடு முழுவதும் ஆகஸ்ட்-15 ஆம் தேதி(நாளை) சுதந்திர தின விழா கொடண்டாடபட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக விசாரணை செய்த 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்பரசி, கவிதா, சரவணன், ஜெயவேல், மணிவண்ணன், கலைச்செல்வி, சிதம்பரம், முருகேசன், கண்மணி ஆகியோர் இந்த விருதினை பெற உள்ளனர்.
Categories