Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஏப்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை வழங்கினார்.

இந்த கூட்டத்தில், பல மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆலோசனையை அடுத்து, ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தமிழகத்திலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அறிவிப்பை தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை காலை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

Categories

Tech |