Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நெருங்கும் புயல்… வெளியான புகைப்படம்… மக்களுக்கு எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் செயற்கைக்கோள் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் வங்கக் கடலில் புதிய நிவார் புயல் உருவாகி இருப்பதால் பொதுமக்களுக்கு மூன்று நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் கரையிலிருந்து புயல் மையத்தின் தூரம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் புயல் கரையை கடக்கும்போது குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு வெளியில் செல்வதை மக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |