இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 11ம் தேதி தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
தென்மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை இடியுடன் கனமழை, நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.