திமுக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) விளக்க பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதை நிறைவேற்றினால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும். அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்துக்கும் முன்மாதிரியான பட்ஜெட் இது.
கடந்த 10 வருடங்களாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை பத்தே மாதத்தில் தலைநிமிர செய்துள்ளோம். ஆளும் கட்சியாக இருந்தாலும் திமுக தமிழகத்திற்கு பெற வேண்டிய உரிமைகளை போராடியும், தைரியமாக வாதாடியும் பெறுவதற்கு ஒருபோதும் தயங்காது. மற்ற மாநிலங்களும் நம்முடைய சமூக நீதியை பின்பற்ற தொடங்கியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களும் தமிழ்நாட்டின் மாநில சுயாட்சியை பேச தொடங்கியுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.