பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருக்கும்போதே பாஜக ஆட்சி அமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அரசின் 7 வருட சாதனைகளை விளம்பரப்படுத்தும் விதமாக சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, எந்த ஒரு தமிழனும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால் பிரதமர் மோடியின் பாதுகாப்பு கண்டிப்பாக தேவை. ஏழு வருடங்களில் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, தான் இந்தியன் என்று சொல்லும்போது ஒரு மரியாதை, ஒரு கொண்டாட்டம், ஒரு பயம் இருக்கிறது.
இதற்கெல்லாம் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி உதாரணமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக அமரப்போவதை பிரதமர் மோடி பார்க்கத்தான் போகிறார். இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.