தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
அந்தவகையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின், “பொள்ளாச்சி கொடுமை அரங்கேற்றிய கயவர்களை அதிமுகவினர் காத்தார்கள். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாற்றிய அதிமுக பாஜக கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். பெண்களுடைய பாதுகாப்பிற்கான மாநிலமாக்குவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.