Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல…. மனப்பூர்வமான பாராட்டுக்கள்…. கமல் டுவிட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள் என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்கிறீர்கள்.சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல என் பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |