Categories
தேசிய செய்திகள்

தமிழகமும் உட்பட 11 மாநிலம்…. நாடு முழுவதும் பேரதிர்ச்சி… கவலையில் மத்திய அரசு …!!

சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் தாக்கத்திற்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை நடுங்க வைத்துள்ளது.

ஒருபக்கம் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றாலும், மறுபக்கம் கொரோனாவால் குணமடைந்து வீடு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதால நாடு முழுவதும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பிய எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து கடந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா, ஒடிஷா, கேரளா, மேற்கு வங்கம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், சட்டிஸ்கர், அருணாச்சல பிரதேஷ் உள்ளிட்ட 11 மாநிலங்களில் இதுவரை பதிவாக அளவாக கொரோனா உறுதி செய்யப்பட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.இதன் காரணமாகவே நாடு முழுவதும் இதுவரை பதிவாகாத அளவாக 45ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |