ஊடகவியலாளர் துரைமுருகன் மீது தொடுக்கப்பட்டுள்ள அடுத்தடுத்த வழக்குகள் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கு என்று சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்தேசிய ஊடகவியலாளர் தம்பி சாட்டை துரைமுருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளின் விளைவாக ஏறத்தாழ 50 நாட்களாக சிறைப் படுத்தப் பட்டிருப்பதைப் ஜனநாயகத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கும் போக்கு என்று சீமான் கண்டித்துள்ளார்.
அடுத்தடுத்து தொடரப்பட்ட நான்கு வழக்குகளில் மூன்று வழக்குகளில் பிணை கிடைத்து விட்ட நிலையில், மீதி வழக்குகளில் பிணை மறுக்கப்பட்டு உள்ளது. துரைமுருகன் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பிணை கிடைக்கவிடாமல் திமுக அரசு அழுத்தம் கொடுக்கிறது என்று குற்றம் சாட்டிய சீமான், இதற்குப் பின்னும் அழுத்தம் கொடுத்தாள் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார்.