தமிழக முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிசம்பர் 9ஆம் தேதியும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் டிசம்பர் 12ஆம் தேதியும், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் டிசம்பர் 13ஆம் தேதியும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி டிசம்பர் 9, 12,13 ஆகிய தேதிகளில் சொத்துவரி, விலைவாசி, பால்வினை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அதிமுகவினர்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இந்த மூன்று நாட்களும் தமிழகத்தில் பல போராட்டங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories