தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு பணிகள் நிதியிலிருந்து 2022 – 23 ஆம் ஆண்டிற்கான சிறந்த எஸ்சி/எஸ்டி/ பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர் மற்றும் எஸ்சி /எஸ்டி அல்லாத ஒருவர் மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நூல் வெளியிட தலா 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.
இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தம்முடைய பெயர், முகவரி, படைப்பின் பொருள் ஆகிய விவரங்களுடன் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விவரங்கள் தமிழக அரசின் tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.