தமிழகத்தில் நவ., 9,10,11 ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கும் நிலையில், இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் (9,10) அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. சென்னையை பொறுத்தவரை 2 நாட்கள் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் அதிக மழையை பொருத்தவரையில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. அதேபோல தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடரும். சென்னையை பொறுத்தவரை கனமழை தொடரும் என்றும், அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும்.
11ஆம் தேதி காலை தான் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி வடதமிழகம் கடற்கரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 11ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை தெற்கு ஆந்திரா, இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தென்கிழக்கு வங்கக் கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..